மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியானது 3டி வீடியோ!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியானது 3டி வீடியோ!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியானது 3டி வீடியோ!

மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி வீடியோவை மத்திய அரசு வெளியிட்டது.
மதுரை தோப்பூரில் 220 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி 2024 மே 22ல் துவங்கியது. 2019ல் மருத்துவனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான திட்டத்தின் மதிப்பு ரூ.2021 கோடி. இரண்டு கட்டங்களாக கட்டுமானம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. முதல் கட்டப் பணி 2026ம் ஆண்டிலும், 2ம் கட்டப் பணி 2027ம் ஆண்டிலும் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. 900 படுக்கைகள், ஹெலிகாப்டர் தளம், குறுங்காடு போன்றவை எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூன் 17) மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி வீடியோவை மத்திய அரசு வெளியிட்டது. வீடியோவில் மருத்துவமனை எப்படி இருக்கும் என்பது தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.