பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி
பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி
பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி
ADDED : ஜூன் 17, 2025 03:10 PM

சென்னை: தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் என்பதால் கள்ளுக் கடையை மூடுகிறார்கள். கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக்கில் வியாபாரம் படுத்துவிடும். இதனை தவிர வேறு ஏதும் காரணம் இருக்கா சொல்லுங்க?
தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது. நான் பனைமரம் ஏறினால் அது ஜாதி பெயராக மாறிவிடுகிறது. புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார். இவ்வாறு சீமான் கூறினார்.
கடந்த ஜூன் 15ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.