Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பி.எட்.,டிற்கு இணையான படிப்பு

பி.எட்.,டிற்கு இணையான படிப்பு

பி.எட்.,டிற்கு இணையான படிப்பு

பி.எட்.,டிற்கு இணையான படிப்பு

ADDED : ஜூலை 31, 2011 11:16 PM


Google News

தேனி : தேனி சுப்பன் தெருவில் செயல்படும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை., தொலை நிலைக்கல்வி இயக்க தேனி ஒருங்கிணைப்பாளர் ராஜா கூறியதாவது: நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பி.ஏ.,-தமிழ், வரலாறு, தமிழிசை, பி.லிட்-தமிழ் இலக்கியம் மற்றும் பி.எஸ்.சி., புவியியல், எம்.ஏ.,-தமிழ், தமிழிசை, வரலாறு மற்றும் எம்.எஸ்.சி., புவியியல், எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.சி.ஏ.,(இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை)பி.ஜி.டி.சி.ஏ., படிப்புகளும், பட்டய படிப்புகளான இசை ஆசிரியர், யோகா, பரதநாட்டியம் பயிற்சி, பரதநாட்டியம், மருத்துவ மூலிகை அழகுக்கலை, மூலிகை மருத்துவ பாடப்பிரிவுகளும். சான்றிதழ் படிப்புகளான இசை, பரதநாட்டியம், நூலக அறிவியல், தமிழ்ப்புலவர் பயிற்சிக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழ்ப்புலவர் பயிற்சி என்ற சான்றிதழ் படிப்பு பி.எட்-க்கு இணையானது. ஒரே நேரத்தில் மற்றொரு பட்டம், பட்டயம் சான்றிதழ், வகுப்புகளில் படிக்கும் வாய்ப்பு உள்ளது. பாடங்கள் தமிழ் வழியில் கற்றுத் தரப்படுகின்றன. போடி, ஆண்டிபட்டியிலும் கிளைகள் உள்ளன என்றார்.

மேலும் விபரங் களுக்கு: 99423 30605ல் தொடர்பு கொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us