விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்
விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்
விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்
ADDED : ஜூன் 19, 2024 04:14 PM

புதுடில்லி: டில்லியில் இருந்து கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி போடாததால், பயணிகள் ஒரு மணி நேரம் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். தங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர்.
வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதில் தேசியத் தலைநகர் டில்லியும் அடங்கும். இங்கும் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் இருந்து பீஹாரின் தர்பங்கா என்ற நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் செல்லவிருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த நிலையில், ஒரு மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. அதேநேரத்தில் ஏசியும் இயக்கப்படவில்லை. இதனால், விமானத்தில் அமர்ந்து இருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவர்கள், தங்கள் கைகளில் இருந்த புத்தகத்தையே விசிறியாக மாற்றி வீசிக் கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. நெட்டிசன்கள், விமான நிறுவனத்தை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.