ADDED : செப் 20, 2011 09:13 PM
செஞ்சி : சத்தியமங்கலம் ஆர்.சி., பெண்கள் தொடக்க பள்ளியில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயகோபால், மையத்தை துவக்கி வைத்தார். தலைமையாசிரியை சகோதரி மரிய சவுந்தரம் முன்னிலை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் பீட்டர் பால், வளமைய ஒருங்கிணைப்பாளர் தென் றலரசு, ஆசிரிய பயிற்றுனர்கள் ஸ்ரீமுல்லை, பாலாஜி பங்கேற்றனர்.