Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

சீமான் கட்சிக்கு கிடைக்கிறது அங்கீகாரம்

UPDATED : ஜூன் 06, 2024 12:28 AMADDED : ஜூன் 06, 2024 12:25 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: லோக்சபா தேர்தலில், ஒரு இடத்திலும் வெற்றி பெறாத நிலையிலும், 8.09 சதவீத ஓட்டுகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற உள்ளது.

அரசியல் கட்சிகள், 'மாநில கட்சி' என்ற தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற, லோக்சபா தேர்தலாக இருந்தால், ஒவ்வொரு 25 தொகுதிக்கு ஒன்று வீதத்தில், தமிழகத்தில் குறைந்தது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத ஓட்டுகளைப் பெற வேண்டும்.

அந்த வகையில், இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற உள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், 8.09 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ள, நாம் தமிழர் கட்சியும், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற உள்ளது.

அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு, தனிப்பட்ட சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னத்தை, மற்ற கட்சிகள் பயன்படுத்த இயலாது. அக்கட்சி களுக்கு வேட்பாளர் பட்டியல் கட்டணமின்றி வழங்கப்படும். கட்சி வேட்பாளரை, ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும். தேர்தல் பிரசாரத்திற்கு 40 நட்சத்திர வேட்பாளர்களை பயன்படுத்தி, அவர்களின் போக்குவரத்து செலவிற்கு விலக்கு பெறலாம்.

தேர்தல் கமிஷன் ஆலோசனைக் கூட்டத்திற்கு, அக்கட்சியின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவர்.

அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில், தேர்தல் பிரசாரம் செய்ய, அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ள நிலையிலும், நாம் தமிழர் கட்சிக்கு, மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சி, 2016 சட்டசபை தேர்தல் முதல் தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சிக்கு, 8.22 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

சிவகங்கையில் 15.5, நாகப்பட்டினத்தில் 13.4, தென்காசியில் 12.5, துாத்துக்குடியில், 12.2, தஞ்சாவூரில் 11.6, திருச்சியில் 10.1, பெரம்பலுாரில் 10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் கமிஷனின், மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.

அதே நேரத்தில், அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு, நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பல தொகுதிகளில், நான்காவது இடம்தான் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us