ADDED : ஜூன் 06, 2024 12:25 AM
ஆன்மிகம்
வைகாசிப் பெருவிழா
காலை 7:00 மணிக்கு பல்லக்கு தீர்த்தவாரி, இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபை துவஜா அவரோஹணம். இடம்: அமிர்தவல்லி தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம் - 49.
பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக சங்கீத உபன்யாசம். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
அமாவாசை பூஜை
கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:30 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம் - காலை 8:00 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் - காலை 9:30 மணி முதல். இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
ராகு கால வழிபாடு - மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம் -காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு -மாலை 5:00 மணி. திருபாணாழ்வார் ஆஸ்தானம் -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.