பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் நாளை முழு அடைப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் நாளை முழு அடைப்பு
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் நாளை முழு அடைப்பு

இந்த விலை உயர்வுக்கு கேரளாவில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு, வன்முறையும் நிகழ்ந்துள்ளது. அரசு வாகனங்களுக்கு தீ வைத்தல், அரசு சொத்துக்கள் சேதம் போன்றவையும் நடந்தன.வன்முறைகளைத் தடுக்க முயன்ற போலீசார் மீது, கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால், வேறு வழியின்றி அக்கும்பல் மீது, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டினர்.
இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாளை, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கார், பஸ், லாரி, ஆட்டோ, டாக்சி, இரு சக்கர வாகனங்கள் என, அனைத்து வாகனங்களும் ஓடாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், மாநில எதிர்க்கட்சியான இடதுசாரி முன்னணியினரும், நாளை மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கும் என்பது உறுதி.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசு குறைப்பு:கேரளாவில் நாளை முழு அடைப்பு என, எதிர்க்கட்சிகளும், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் அறிவித்துள்ள நிலையில், மாநில அரசு பெட்ரோலுக்கான கூடுதல் வரியை குறைத்துள்ளது. இதனால், 'அரசுக்கு 108 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்' என, முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலத்தில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 70 காசு குறைக்கப்படுகிறது.