Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.84,400

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.84,400

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.84,400

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.84,400

ADDED : செப் 26, 2025 09:37 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் இன்று (செப் 26) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.84,400க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 10,600 ரூபாய்க்கும், சவரன் 84,800 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (செப் 25) தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து, 10,510 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 720 ரூபாய் சரிவடைந்து, 84,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,040 சரிந்தது.

இந்நிலையில் இன்று (செப் 26) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.84,400க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சற்று உயர்வை கண்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us