ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
விழுப்புரம் : நேமூர் ஷெட் பவுன்டேஷன் தொண்டு நிறுவனம், திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவ மனை, ஈ.மண்டகப்பட்டு தாவீது நினைவு அறக்கட்டளை, விழுப்புரம் பிளாசா அறக் கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் முட்டத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சி.எஸ்.ஐ.,வேலூர் பேராய தென் வட்டார தலைவர் அபிரகாம் ஆசைத் தம்பி தலைமை தாங்கினார். முட்டத்தூர் குருசேகர ஆயர் பக்தகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் 263 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 56 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வாகினர். முகாம் ஏற்பாடுகளை ஒய்க்காப் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லதுரை செய்திருந்தார்.