வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை
வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை
வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை

வருவாய் உபரி
ரூ.37,000 கோடி வரி உபரியுடன் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அடுத்தபடியாக குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.28,592 கோடி), தெலுங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராக்கண்ட் (ரூ.5,310 கோடி), மத்தியப் பிரதேசம் (ரூ.4,091 கோடி) மற்றும் கோவா (ரூ.2,399 கோடி) வருவாய் உபரி உடன் உள்ளன.
வருவாய் பற்றாக்குறை
இதில் ஆந்திரப் பிரதேசம் (ரூ.43,488 கோடி), தமிழகம் (ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (ரூ.27,295 கோடி), பஞ்சாப் (ரூ.26,045 கோடி), ஹரியானா (ரூ.17,212 கோடி), அசாம் (ரூ.12,072 கோடி), பீஹார் (ரூ.11,288 கோடி), ஹிமாச்சலப் பிரதேசம் (ரூ.26,336 கோடி), கேரளா (ரூ.29,226 கோடி), மஹாராஷ்டிரா (ரூ.1,936 கோடி) மற்றும் மேகாலயா (ரூ.44 கோடி) ஆகியவை பற்றாக்குறையை கொண்டுள்ளன.
மானியங்கள்
மத்திய அரசின் வருவாய் மானியங்களால் மீண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம், கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை இருப்பதால் வருவாய் பற்றாக்குறையில் வேகமாக மீண்டு வருகிறது.