ADDED : ஆக 01, 2011 03:49 AM
மோகனூர்: தே.மு.தி.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மோகனூரில்
நடந்தது.
மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சம்பத்குமார் தலைமை
வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் விஜயன் வரவேற்றார். மாநில மாணவரணி இணைச்
செயலாளர் மகேஸ்வரன், எம்.எல்.ஏ., சாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர்
வக்கீல் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தே.மு.தி.க.,
நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு
செய்யப்பட்டது. அன்றைய தினம், நகர, ஒன்றிய பகுதிகளில் கட்சிக்கொடி
ஏற்றியும், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது,
கட்சியில் தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பது என்பது உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில், ஒன்றிய பொறுப்பாளர் சரவணன்,
ஆரியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜாகண்ணன், முன்னாள் மாவட்ட
பொருளாளர் விஜய், ஒன்றிய அவைத்தலைவர் பாண்டியன், நகர, ஒன்றிய, கிளை கழக,
சார்பு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.