எல்லையில் இனி யாரும் வாலாட்ட முடியாது; வந்தாச்சு தற்கொலைப்படை ட்ரோன்கள்
எல்லையில் இனி யாரும் வாலாட்ட முடியாது; வந்தாச்சு தற்கொலைப்படை ட்ரோன்கள்
எல்லையில் இனி யாரும் வாலாட்ட முடியாது; வந்தாச்சு தற்கொலைப்படை ட்ரோன்கள்
ADDED : ஜூன் 15, 2024 05:58 AM

புதுடில்லி : நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயலும் எதிரி நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழிக்கும், உள்ளே நுழைத்தால் துவம்சம் செய்யும், தற்கொலைப்படை ட்ரோன்கள், நம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, நாகாஸ்திரா என பெயரிடப்பட்டுள்ள, அதிநவீன ட்ரோன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சோலார் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின், இ.இ.எல்., எனப்படும் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிஸ் நிறுவனம், இந்த ட்ரோனை வடிவமைத்து உள்ளது. இந்த ட்ரோனில் வெடிகுண்டு வைத்து அனுப்பப்படும். அதற்கான இலக்கை நிர்ணயித்து அனுப்பி வைத்தால் போதும்.
அந்த இலக்கு எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கு சென்று வானத்தில் காத்திருந்து, சரியான நேரத்தில் தாக்கி அழிக்கும்.
எல்லைக்கு அப்பாலில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலுக்கு இது பயன்படுத்த முடியும். நம் வீரர்கள், தங்களுடைய தோளிலேயே இதை சுமந்து செல்ல முடியும்.
தன் இலக்கு கிடைத்துவிட்டால், வானில் இருந்து நேராகச் சென்று தன்னையும் அழித்து, இலக்கையும் அழிக்கும். அதனால், இதை, தற்கொலைப்படை ட்ரோன் என்றழைக்கின்றனர்.
பல்வேறு சோதனைகளுக்குப் பின், இந்த ட்ரோனுக்கு மத்திய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. முதல்கட்டமாக, 480 ட்ரோன்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 120 ட்ரோன்கள், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.