/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த உத்தரவு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த உத்தரவு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த உத்தரவு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த உத்தரவு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த உத்தரவு
ADDED : ஜூன் 15, 2024 05:33 AM

புதுச்சேரி: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்சார் பொருத்த பொதுப்பணித் துறைக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகரில் கழிவறையில் விஷவாயு தாக்கி, 3 பெண்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன், வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், புது நகர், செல்லாம்பாபு நகர், மூகாம்பிகை நகர், பாவாணர் நகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித் துறை அலட்சியத்தால் விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என, நல வாழ்வு சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
சிவசங்கர் எம்.எல்.ஏ., பேசுகையில், 'விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ள புது நகரில் தற்போதுள்ள கழிவு நீர் பைப்பினை அப்படியே கைவிட வேண்டும். அதற்கு பதில் விஷவாயு வெளியேறும் வகையில் ஏர் வென்ட்டுடன் கூடிய புதிய பைப்பினை போட்டு, அரசு செலவில் இணைப்பு கொடுக்க வேண்டும்' என்றார்.
கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், 'புது நகரில் விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ள இடங்களில் மூன்று நாட்களுக்குள் ஏர் வென்ட் அமைக்க வேண்டும். செல்லாம்பாபு, பாவாணர் நகர் பதிகளில் கழிவு வாய்க்காலை முறையாக பராமரிக்க வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு கசிவை கண்காணிக்க சென்சார் பொருத்த பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.