தொழில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபர்களை மீட்க நடவடிக்கை: முதன்மை செயலர் ஸ்ரீதர் தகவல்
தொழில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபர்களை மீட்க நடவடிக்கை: முதன்மை செயலர் ஸ்ரீதர் தகவல்
தொழில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபர்களை மீட்க நடவடிக்கை: முதன்மை செயலர் ஸ்ரீதர் தகவல்
சென்னை : 'தொழில் நெருக்கடியிலிருந்து, சிக்கித் தவிக்கும் தொழிலதிபர்களை வங்கி, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் பங்களிப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் முதன்மைச் செயலர் ஸ்ரீதர் கூறினார்.
கருத்தரங்கில், பங்குதாரர்களுடன், நன்றாகத் தொழில் நடத்துபவர்களிடையே சிறு மனஸ்தாபம், கொள்கை வேறுபாடுகளால் தொழிலிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பவர்கள்; மகளிர் தொழில் துவங்கிய பின், கணவன் மற்றும் வயதுக்கு வந்த தங்கள் குழந்தைகளின் திருமணத்தின் பொருட்டு, தொழிலில் இருந்து விலக முடியாதவர்கள்; தொழில் பயிற்சி வல்லுனர்கள் தொழிலைத் தொடங்கி, லாபகரமாக நடத்தியபின், எதிர்பார்த்த அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் காண முடியாதவர்கள்; நலிவடைந்த தொழிலை முன்னேற்ற வழிவகைகள் இல்லாமல், தொழிலில் இருந்து வெளியேற நினைப்பவர்கள்;
20 அல்லது 30 ஆண்டுகள் லாபகரமாகத் தொழில் நடத்திவிட்டு, தனக்குப் பின் வாரிசுதாரர்கள் தொழிலில் விருப்பமில்லாமல் விடுபடுதல் உள்ளிட்ட, ஐந்து வகையான பிரச்னைகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று சிறு மற்றும் குறுந்தொழில் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கை, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதரிடம் வழங்கப்பட்டது.அப்போது, அவர் கூறும்போது, 'இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, வங்கிகள், மத்திய அரசு மற்றும் மாநில ஆரசு ஆகியவை இணைந்து, தொழில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலதிபர்களை மீட்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


