Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பயங்கரவாதிகளுடன் பாக் அரசுக்கு உள்ள தொடர்பை உலகம் அறியும்: மத்திய வெளியுறவுத்துறை

பயங்கரவாதிகளுடன் பாக் அரசுக்கு உள்ள தொடர்பை உலகம் அறியும்: மத்திய வெளியுறவுத்துறை

பயங்கரவாதிகளுடன் பாக் அரசுக்கு உள்ள தொடர்பை உலகம் அறியும்: மத்திய வெளியுறவுத்துறை

பயங்கரவாதிகளுடன் பாக் அரசுக்கு உள்ள தொடர்பை உலகம் அறியும்: மத்திய வெளியுறவுத்துறை

ADDED : செப் 19, 2025 05:41 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ' பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கும் உள்ள தொடர்பை உலகம் அறியும். ஆப்பரேஷன் சிந்துாரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி வெளியிட்ட வீடியோ அதனை தெளிவுபடுத்துகிறது,' என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முக்கியப்புள்ளியான முகம்மது இலியாஸ் காஷ்மீரி வெளியிட்ட வீடியோவில், 'ஆப்பரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் கொல்லப்பட்டது' எனக்கூறியிருந்தான்.

மற்றொரு வீடியோவில் பாலக்கோட் பயங்கரவாத தளத்தில் இருந்து தான், மும்பை மற்றும் இந்திய பார்லிமென்ட் மீதான தாக்குதலுக்கு மசூத் அசார் திட்டமிட்டு இருந்தான்' எனவும் கூறியிருந்தான். இதனிடையே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனும் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்தியாவின் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், அதனால் சேதம் அடைந்த பயங்கரவாத பயிற்சி தளத்தையும் எடுத்துக்காட்டினான்.

இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பயங்கரவாத விஷயங்களில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு உள்ளத் தொடர்பை உலகம் அறியும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளது. அவர்களின் கருத்துகள் இதனை தெளிவுபடுத்துகிறது.

பயங்கரவாதிகளையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டும். பயங்கரவாதிகளை எதிர்ப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான பொருளாதாரத் தடை விலக்குகளை அமெரிக்கா ரத்து செய்ய முடிவு செய்தது குறித்த கேள்விக்கு ரன்தீர் ஜெயிஸ்வால் கூறுகையில், ' அமெரிக்காவின் அறிக்கையை பார்த்தோம். அதனால், இந்தியாவுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்,' என்றார்.

நேபாள விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'நேபாளத்தில் சுசீலா கார்கி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது. அவருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அண்டை நாடுஎன்ற முறையில் நேபாளத்தின் நலன் மற்றும் இரு நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு இந்தியா உதவும்' என்றார்.

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரன்தீர் ஜெயிஸ்வால்,' அமெரிக்க அதிகாரிகளுடனும், இறந்தவரின் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கிறோம்' என்றார்

கனடாவில் இந்திய தூதரகத்திற்கு காலிஸ்தான் மிரட்டல் குறித்த கேள்விக்கு, ' அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிது கனடா அரசின் பொறுப்பு. அங்கு பிரச்னை ஏற்படும் போது, அந்நாட்டின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசனை நடத்தினார்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us