/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?
பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?
பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?
பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?
ADDED : ஆக 24, 2011 02:37 AM
திருநெல்வேலி : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்குனருக்கு போனில் மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனராக இருப்பவர் ரமேஷ். இவர் 2010-11 கல்வியாண்டு தொலை தூரக்கல்வி பி.எட்., மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2ம்தேதி ரமேஷின் செல்போனுக்கு பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் ரமேஷ் புகார்மனு அளித்தார். நெல்லை ஜே.எம். 5 கோர்ட்டில் மனு அளித்தார். கோர்ட் உத்தரவுப்படி பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.