வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளும் வருமான வரி விதிக்கலாம்; ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர் யோசனை
வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளும் வருமான வரி விதிக்கலாம்; ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர் யோசனை
வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளும் வருமான வரி விதிக்கலாம்; ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர் யோசனை

சென்னை: அமெரிக்காவைப் போன்று மாநில அரசுகளும் தங்களின் வருவாயை அதிகரிக்க வருமான வரியை விதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் ராஜா ஜே செல்லையா நினைவு கருத்தரங்களில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது; வருமான வரியைப் பொறுத்தவரையில், நீங்கள் விரிவான செயல்முறையை மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மாநில வருமான வரியாக எடுத்துக் கொள்ளப்படும்.
மாநில பட்ஜெட்டானது மது, புகையிலை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய 3 வருவாயை நம்பியே இருக்கின்றன. அதில் தற்போது பெட்ரோலியப் பொருட்கள் வரி வருவாய் குறைந்து விட்டது. மாநில வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமெனில், கட்டாயம், வரி கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். வரி வருவாயை அதிகரிக்க செலவின வரி மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரடி வரிகளை விதிக்க வேண்டும். அதேபோல, பெட்ரோலிய, எண்ணெய் பொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது வேகமாக நடைபெறவில்லை. நமது இறக்குமதியில் 30 சதவீதம் எண்ணெய் பொருட்களாகும். இதனால், எரிசக்தி பாதுகாப்பில் பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.