/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிராமப்புற பள்ளி மாணவர்கள் போலீஸ் சார்பில் ஊக்குவிப்புகிராமப்புற பள்ளி மாணவர்கள் போலீஸ் சார்பில் ஊக்குவிப்பு
கிராமப்புற பள்ளி மாணவர்கள் போலீஸ் சார்பில் ஊக்குவிப்பு
கிராமப்புற பள்ளி மாணவர்கள் போலீஸ் சார்பில் ஊக்குவிப்பு
கிராமப்புற பள்ளி மாணவர்கள் போலீஸ் சார்பில் ஊக்குவிப்பு
ADDED : ஆக 18, 2011 04:33 AM
காரைக்கால் : அரசு பள்ளிகளில் கிராமப்புற அளவில் சாதனை படைத்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக போலீசார் சார்பில் முதன்முறையாக பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.
காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழாவில் கவுரவித்து பரிசுகள் வழங்குவது வழக்கம்.
அரசு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கிராமப்புற அரசுப் பள்ளிகளில், பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக காரைக்காலில் சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த் ஏற்பாட்டின்படி காரைக்காலைச் சேர்ந்த 19 கிராமப்புற அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இதுபோல் வழங்கப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் சந்திரகாசு பரிசுக் கோப்பைகளை வழங்கினார். விழாவில் கலெக்டர் பிராங்க்ளின் லால்டின்குமா, சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த், எஸ்.பி., வெங்கடசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.