/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்குஇரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு
இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு
இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு
இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு
ADDED : அக் 01, 2011 12:27 AM
திண்டிவனம் : மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன், 36.
இவருக்கும் வல்லம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணமாகி, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கந்தன், கடந்த ஜூலை மாதம் செம்பாக்கம் அடுத்த மேட் டூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் வசந்தியை, 18 , இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த புவனேஸ்வரி புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், கந்தன், அவரது தந்தை நந்தகோபால், 60, தாய் விஜயா, 55, இரண்டாவது மனைவி வசந்தி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.