ADDED : செப் 12, 2011 03:46 AM
மோகனூர்: வ.உ.சி., பேரவை சார்பில், வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா,
மோகனூரில் கொண்டாடப்பட்டது.பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் வரதன் வரவேற்றார். செயலாளர் வக்கீல தங்கமுத்து, துணைச்
செயலாளர் ஜெயசீலன், இணைச் செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் கண்ணன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வ.உ.சி., படத்துக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், சோழிய வேளாளர் சங்க தலைவர்
ராஜகோபால், செயலாளர் சக்திவேல், பொருளாளர் நடராஜன், ஓய்வு பெற்ற வேளாண்
அதிகாரி தண்டபாணி, ஜெகதீசன், சண்முகவடிவேல் சேனாபதி, பேரவை உறுப்பினர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.