ADDED : ஆக 28, 2011 11:19 PM
விழுப்புரம் : தமிழ்நாடு வன அலுவலர் சங்க விழுப்புரம், கடலூர் மாவட்ட கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு விழுப்புரத்தில் நடந்தது.
திண்டிவனம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செஞ்சி வனச்சரகர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில தலைமை சங்க தேர்தல் ஆணையர்கள் மாயவேலு, திருச்சி மாவட்ட தலைவர் சீனுவாசன் விதிமுறைகளை விளக்கி கூறி தேர்தலை நடத்தினர். மாவட்ட தலைவராக வனச்சரகர் கொளஞ்சியப்பா, மாவட்ட செயலாளராக அருண்ராஜ், மாவட்ட பொருளாளராக ராயர், மாவட்ட துணை தலைவராக பழனிச்சாமி, மாவட்ட இணை செயலாளராக கதிர்வேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் பொன்னுரங்கம், செல்வம், சின்னையன், செல்வமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி வனச்சரகர் தமிழரசன் நன்றி கூறினார்.