உத்தர்கண்டில் கனமழை: சுவர் இடிந்து 3 பேர் பலி
உத்தர்கண்டில் கனமழை: சுவர் இடிந்து 3 பேர் பலி
உத்தர்கண்டில் கனமழை: சுவர் இடிந்து 3 பேர் பலி
ADDED : ஆக 01, 2024 01:10 AM

டேராடூன்: உத்தர்க்கண்டில் பெய்த கனமழை காரணமாக ஹரிதுவாரில் வீட்டில் சுவர் இடிந்து 3 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
டில்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டில்லியில் நேற்று மாலை பெய்யத் துவங்கிய மழை 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் உத்தர்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஹரிதுவார் மாவட்டம் பஹர்பூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர்.
மேலும் சில மாவட்டங்களில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.