Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி பகுதியில் கனமழை பெய்தும்மழை நீரை சேமிக்க முடியாத அவலம்

செஞ்சி பகுதியில் கனமழை பெய்தும்மழை நீரை சேமிக்க முடியாத அவலம்

செஞ்சி பகுதியில் கனமழை பெய்தும்மழை நீரை சேமிக்க முடியாத அவலம்

செஞ்சி பகுதியில் கனமழை பெய்தும்மழை நீரை சேமிக்க முடியாத அவலம்

ADDED : செப் 18, 2011 10:22 PM


Google News
செஞ்சி:செஞ்சி பகுதியில் கனமழை பெய்தும் வழக்கம் போல் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செஞ்சி பகுதியில் பொதுப்பணித்துறை, ஒன்றியத்திற்கு சொந்தமானது என 431 ஏரிகள் உள்ளன. இவையே செஞ்சி பகுதியின் விவசாயம் செழிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவும் முக்கிய ஆதாரமாக உள்ளன.சமீப ஆண்டுகளாக ஏரிகளை ஆக்கிரமித்து அழித்து வருவதும், ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்களை மூடி நிலமாகவும், வீடுகளையும் கட்டி வருகின்றனர். இதனால் பெரும் பகுதி ஏரிகள் அழியும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் செஞ்சி தாலுகாவின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வராக நதி நீரும் செஞ்சி பகுதி விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. வராக நதியின் குறுக்கே கட்டப்பட்ட கூடப்பட்டு அணையும், செவலபுரை அணையும் சரியான பராமரிப்பில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் வீணாகி வருகிறது.கூடப்பட்டு அணையில் இருந்து மேலச்சேரி, சிங்கவரம், சிறுகடம்பூர், நாட்டேரி, குப்பம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வராக நதி வாய்க்காலில் கன மழை காரணமாக கடந்த சில நாட்களாக அதிகளவில் தண்ணீர் சென்றது.

இந்த தண்ணீர் ஏரிகளை சென்றடைவதற்கு முன்பாகவே பூனை கண்ணு மடை என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் வராக நதியில் கலந்து வீணாகி வருகிறது. இந்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் உடைப்பு ஏற்படுவதும், தற்காலிகமாக சரி செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.செவலபுரை அணையை பராமரிக்காமல் போனதால் அணை செயலிழந்து வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த 13 ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை. இங்கிருந்தும் வராக நதி வழியாக தண்ணீர் வீணாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் மழைநீர் செஞ்சி பகுதி விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருவதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us