ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி
ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி
ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி
ADDED : ஜூலை 02, 2024 02:23 AM

புதுடில்லி: ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடியாக இருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை, ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. காலம் காலமாக மாநில அரசுகளும், மத்திய அரசும் தனித்தனியாக வசூலித்து வந்த மறைமுக வரியானது, ஜி.எஸ்.டி., வாயிலாக ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், கடந்த மே மாத ஜி.எஸ்.டி., வசூல், 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1.73 லட்சம் கோடியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 7.7 சதவீதத்துடன் ரூ. 1.74 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி., ரூ. 39,586 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 33,548 கோடியாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்து.