/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
நான்குநேரி : முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம சந்தை திறப்பு விழாவில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.நான்குநேரி யூனியனிற்குட்பட்ட முனைஞ்சிப்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தை திறப்பு விழாவிற்கு மாவட்ட திட்ட அதிகாரி அமானுல்லாஹ் தலைமை வகித்தார்.
யூனியன் சேர்மன் வேண்டுகோளின் படி முனைஞ்சிப்பட்டியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் பழுதடைந்த ரோடுகளை செப்னிடவும், குடிநீர் பிரச்னை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசினார்.விழாவில் முன்னாள் எம்எல்ஏ., மாணிக்கராஜ், அதிமுக தொகுதி செயலாளர் விஜயநாராயணம் முருகன், மகளிர் திட்ட அதிகாரி ராமமூர்த்தி, தாசில்தார் கதிரேசன், டிஎஸ்பி., கோவிந்தராஜ், மாணவரணி மாவட்ட செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாவட்ட பாசறை செயலாளர் ராஜ மணிகண்டன், முன்னாள் மாவட்ட பேரவை செயலாளர் முத்துடையார், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் நாராயணன், பஞ்., தலைவர் ராமசுப்பு, சரோஜா தங்கராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நான்குநேரி யூனியன் கமிஷனர் சுந்தரவடிவேல் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை யூனியன் சேர்மன் சாலமன் ராஜா, பிடிஓ.,க்கள் சுந்தரவடிவேல், ரத்தினசபாபதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


