ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
திருக்கனூர் : செட்டிப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.திருக்கனூரை அடுத்த செட்டிப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 20ம் தேதி துவங் கியது.
தொடர்ந்து தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.22ம் தேதி காலை 11 மணிக்கு கெங்கையம்மனுக்கு பால் அபிஷேகம், மதியம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதிவுலா நடந்தது.