ADDED : செப் 08, 2011 10:39 PM
சிவகாசி : சிவகாசி தொழிற்சாலைகள் துணைத்தலைமை ஆய்வாளர் பெரியசாமி அறிக்கை: சிவகாசி கோட்ட தொழிற்சாலைகள் உரிமங்களை புதுப்பிக்க, ஆவணங்களுடன் சிவகாசி தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் அக்.31க்குள் சமர்பிக்க வேண்டும்.
தொழிலாளர் துறை நிர்ணயித்த கட்டணத்தை, தேசிய வங்கியில் தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வாளர் பெயரில் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். பங்குதாரர் மாற்றம் இருப்பின் ரூ.50க்கான வரைவோலை இணைக்க வேண்டும். உரிமையாளர், பங்குதாரர் இறப்பு நிகழ்ந்தால் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வாரிசுகளின் மறுப்பின்மைச்சான்று இணைத்து வழங்க வேண்டும், என,குறிப்பிடப்பட்டுள்ளது.