/உள்ளூர் செய்திகள்/தேனி/கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக எல்லையில் பரிசோதனைகேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக எல்லையில் பரிசோதனை
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக எல்லையில் பரிசோதனை
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக எல்லையில் பரிசோதனை
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக எல்லையில் பரிசோதனை
ADDED : ஜூலை 23, 2011 01:08 AM
கூடலூர் : கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக கூடலூர் செக்போ ஸ்டில் சுகாதாரததுறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் ஆழப்புழா, இடுக்கியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது.
தமிழகத்தில் இருந்து தினமும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு தொழிலாளர்கள் அதிகம் செல்கின்றனர். விரைவில் பரவக்கூடிய இந்த நோய் தமிழக எல்லையோர கிராமங்களிலும் பரவிவிடும் என்பதற்காக, லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடிமெட்டு பகுதியில் தமிழக சுகாதாரத்துறையின் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். லோயர்கேம்பில், மருத்துவ அதிகாரி கலாவதி தலைமையில், டாக்டர்கள் முருகன், ரமேஷ், பிரித்தா கொண்ட குழு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் அறிகுறியுள்ள உள்ள பயணிகளை தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.