Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நான்கு நாளில் நிலைமை சரியாகும் : மத்திய அமைச்சர் ஷிண்டே உறுதி

நான்கு நாளில் நிலைமை சரியாகும் : மத்திய அமைச்சர் ஷிண்டே உறுதி

நான்கு நாளில் நிலைமை சரியாகும் : மத்திய அமைச்சர் ஷிண்டே உறுதி

நான்கு நாளில் நிலைமை சரியாகும் : மத்திய அமைச்சர் ஷிண்டே உறுதி

ADDED : அக் 14, 2011 11:21 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''தற்போதைய மின் உற்பத்திப் பற்றாக்குறை, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் சரியாகும். வெளிச்சத்துடன் தீபாவளி கொண்டாடப்படும்'' என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

டில்லியில், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நிலக்கரி அதிகமாக உள்ள மின் நிறுவனங்களில் இருந்து, குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. நிலக்கரி சப்ளை பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நிலக்கரி அமைச்சகத்துடன் பேசியுள்ளோம். ஒடிசாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் மழை நீர் புகுந்துள்ளதால், அங்கிருந்து நிலக்கரி வெட்டி எடுக்க முடியவில்லை. தற்போது, நிலைமை மேம்பட்டுள்ளது. நிலக்கரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லத் தேவையான சரக்குப் பெட்டிகளைத் தந்து உதவும்படி, ரயில்வே அமைச்சகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளோம். மின் உற்பத்திப் பற்றாக்குறை நிலைமை, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் சரியாகும். இந்த தீபாவளி, வெளிச்சத்துடன் கூடிய தீபாவளியாகத் தான் இருக்கும். இவ்வாறு, ஷிண்டே கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us