தெலுங்கானா விடுதலை நாள் கொண்டாட பா.ஜ., அழைப்பு
தெலுங்கானா விடுதலை நாள் கொண்டாட பா.ஜ., அழைப்பு
தெலுங்கானா விடுதலை நாள் கொண்டாட பா.ஜ., அழைப்பு
UPDATED : செப் 07, 2011 06:56 AM
ADDED : செப் 06, 2011 10:49 PM
தராபாத்:தெலுங்கானா பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும், வரும் 17 தேதி, 'தெலுங்கானா விடுதலை நாளை' கொண்டாட வேண்டும் என்று, ஆந்திர மாநில பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, ஆந்திர பா.ஜ., மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறியதாவது:தெலுங்கானா பகுதியில் வசிக்கும், நான்கரை கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க, தெலுங்குதேசம், காங்கிரஸ் அரசுகள் தவறிவிட்டன.
ஆங்கிலேயரிடமிருந்து, நாடு கடந்த 1947 ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.ஆனால், அதற்கு அடுத்த 1948 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி தான், தெலுங்கானா பகுதி, நிஜாம்களிடமிருந்து விடுதலை பெற்று, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. விடுதலைக்குப் பின், தெலுங்கானாவின் சில பகுதிகள் கர்நாடக மாநிலத்துடனும், மகாராஷ்டிரா மாநிலத்துடனும் சேர்ந்துவிட்டன.அம்மாநிலங்கள், இந்த நாளை கொண்டாடி வருகின்றன. அதே போன்று, செப்டம்பர் 17 ம் தேதி, தெலுங்கானா விடுதலை நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி, இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாட, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கானா பகுதி அரசியல் கட்சிகளும், தெலுங்கானா விழாவை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, தத்தாத்ரேயா கூறினார்.