ADDED : செப் 04, 2011 09:53 PM
சென்னை:திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நான்கு பேர் பெண்கள்.இவ்வாறு திரிபாதி கூறினார்.