Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

ADDED : செப் 07, 2025 09:38 AM


Google News
Latest Tamil News
சென்னை: தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அடுத்த கட்ட பிரசாரத்தை செப். 17ம் தேதி தொடங்குகிறார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சட்டசபை தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 120 தொகுதிகளில் பிரசார பயணத்தை முடித்து விட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந் நிலையில் அவரின் 5ம் கட்ட பிரசார சுற்றுப்பயண விவரத்தை (செப்.17-செப்.26) அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை;

5ம் கட்ட சுற்றுப்பயண திட்டம் - செப்.17 முதல் செப்.26 வரை

17.9.2025 - தருமபுரி மாவட்டம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகள்

18.9.2027 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம் சட்டசபை தொகுதிகள்

19.9.2025 - நாமக்கல் - ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகள்

20.9.2025 - நாமக்கல் - நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதிகள்

21.09.2025 - நாமக்கல் - திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகள்

23.09.2025 - நீலகிரி - குன்னூர், உதகமண்டலம் சட்டசபை தொகுதிகள்

24.09.2025 - நீலகிரி - கூடலூர் தொகுதி

25.09.2025 - திண்டுக்கல் மேற்கு - வேடசந்தூர் சட்டசபை தொகுதி கரூர் - கரூர் ( கரூர் டவுன்)

26.09.2025 - கரூர் - அரவக்குறிச்சி(வேலாயுதம்பாளையம்), கிருஷ்ணராயபுரம் (தரகம்பட்டி), குளித்தலை(தோகைமலை)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us