Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இளையான்குடியில் போலீஸ் செக் பாஸ்ட்டில் நள்ளிரவில் தீ

இளையான்குடியில் போலீஸ் செக் பாஸ்ட்டில் நள்ளிரவில் தீ

இளையான்குடியில் போலீஸ் செக் பாஸ்ட்டில் நள்ளிரவில் தீ

இளையான்குடியில் போலீஸ் செக் பாஸ்ட்டில் நள்ளிரவில் தீ

ADDED : செப் 15, 2011 09:18 PM


Google News

இளையான்குடி : இளையான்குடியில் போலீஸ் செக்போஸ்ட் நள்ளிரவில் தீ பிடித்து முற்றிலும் எரிந்தது.

இளையான்குடியில் கடந்த 11 ம் தேதி பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து சிலர் இங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி மாணவன் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறான். மூன்று போலீசார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரமக்குடி கலவரம் மற்றும் இளையான்குடி கலவரத்தால் இளையான்குடி பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பஸ்கள் நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முதல் ( செப் 15 ) பள்ளிகள் திறக்கப்பட்டது. மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி ரோட்டில் இந்திராநகரில் சாலைக்கிராமம் விலக்கு அருகே இருந்த போலீஸ் செக் போஸ்ட் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us