வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கிருஷ்ணகிரியில் கைது
வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கிருஷ்ணகிரியில் கைது
வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கிருஷ்ணகிரியில் கைது
ADDED : ஆக 12, 2011 02:07 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நக்சல் நடமாட்டத்தைக்
கட்டுப்படுத்த, போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று,
ஆந்திரா மாநில எல்லையில், குருவிநாயனப்பள்ளி செக் போஸ்ட் அருகே, வந்த கார்
ஒன்றை சோதனை செய்தபோது, அதில், யூசுப், 30, என்ற ஆணும், திருப்தி, 26, என்ற
பெண்ணும் இருந்தனர்.
அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்,
பாஸ்போர்ட் இல்லாமல் உள்ளதும் தெரிய வந்தது. இருவரையும் பர்கூர் காவல்
நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் எதற்காக இந்தியாவுக்குள்
நுழைந்தனர் என்றும், குறிப்பாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள்
எதற்காக வந்தனர் என்றும், போலீசார் விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு
பின் முரணான தகவல்களை கூறி வருவதால், அவர்கள், நக்சல் இயக்கத்தைச்
சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


