முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி
முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி
முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி

வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியுள்ளதால் பயனர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்திய நேரப்படி மாலை 6:00 மணி அளவில் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது. தங்களின் பக்கங்களில் பதிவுகளை பார்க்க முடியவில்லை என்றும், சிலருக்கு உள்ளே நுழையவே முடியவில்லை எனவும் மற்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திடீரென முடங்கியதாக பயனர்கள் கடும் அவதி அடைந்தனர். அமெரிக்காவில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எக்ஸ் வலைத்தளம் முடங்கியுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24/7 வேலை நடக்குது!
இது குறித்து எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்றைய டேட்டா சென்டர் செயலிழப்பு காரணமாக நாங்கள் இன்னும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். சில பயனர்களுக்கு பதிவுகளை காண முடியவில்லை. பதிவேற்றம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. பிரீமியம் அம்சங்களில் சிக்கல் இருக்கலாம்.
இதனை சரி செய்ய எங்களது குழுவினர் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர். உங்கள் பொறுமைக்கு நன்றி. விரைவில் பிரச்னை சரி செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.