Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : செப் 17, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

தி.மு.க.,வை முடிவெடுக்க வைத்த காங்கிரஸ்...! ''ஒரே மாவட்டத்துல 45 லட்சம் ரூபாய் குவிஞ்சிடுத்து ஓய்...!'' என, பேசியபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.



''மொட்டையா சொன்னா எப்படி...

விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.



''ஆளுங்கட்சி சார்புல, உள்ளாட்சித் தேர்தல்ல போட்டியிட கட்சிக்காரா எல்லாம் போட்டி போட்டுண்டு விண்ணப்பிச்சா... இந்த வகையில, கட்சிக்கு பெரிய வருமானம் கிடைச்சிருக்கு... கோவை மாவட்டத்துல தான், 'டாப்' வசூல் ஓய்...



''மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், இதுக்கான கவுன்சிலர்கள்னு பல பதவிகள் இருக்கு... இதுக்கு போட்டி போட்டு விண்ணப்பிச்சதால, விருப்ப மனு கட்டணம் மட்டும், 45 லட்சத்து, 78 ஆயிரம் ரூபாய் குவிஞ்சிடுத்து ஓய்...



''மேயர் பதவிக்கு, முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு உட்பட பலர், 'ரேஸ்'ல இருந்தா... ஆனாலும், கடைசியில, வேலுசாமிக்கே, 'சீட்' கொடுத்துட்டா... பத்து மாநகராட்சிகளுக்கும், அ.தி.மு.க.,வே மேயர் வேட்பாளர்களை அறிவிச்சிட்டதால, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'ஷாக்'காயிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''உள்ளாட்சித் தேர்தல்ல, தி.மு.க., தனித்துப் போட்டிங்கற முடிவுக்கு, காங்கிரஸ் தான் காரணமாம் வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் பெரியசாமி அண்ணாச்சி.



''அப்படியா...'' என்றார் அந்தோணிசாமி.



''எதிரும், புதிருமா இருந்த இளங்கோவனும், தங்கபாலுவும் திடீர்ன்னு சத்தியமூர்த்தி பவன்ல சந்திச்சு, ஒரு மணி நேரம் ஆலோசனை பண்ணிருக்காங்க வே... அப்ப, உள்ளாட்சித் தேர்தல்ல, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காம, தனியா ஒரு அணி அமைச்சு போட்டியிடலாம்னு விவாதிச்சிருக்காவ... இதுக்கப்பறம் தான், இந்த தகவலை இளங்கோவன் பகிரங்கமா ஈரோட்டுல வெளியிட்டுருக்காரு வே...



''இதனால, தி.மு.க., தலைவர் கடுப்பாகி, அதுக்கப்பறம் தான், 'தனித்து போட்டி'ன்னு, ராத்திரியோட ராத்திரியா அறிக்கை விட்டாராம் வே...'' என, தி.மு.க., முடிவு பின்னணியை விளக்கினார் அண்ணாச்சி.



''லாட்டரி அதிபருடன் ஆளுங்கட்சி பிரமுகர்கள் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்துச்சுன்னு விசாரிக்கறாங்க பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.



''எதுக்கு ஓய்...?'' என்று கேட்டார் குப்பண்ணா.



''முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில, முதல் ரெண்டு வருஷத்துல லாட்டரி அதிபர், வணிக வரித்துறைக்கு வரி கட்டாம, கேரளாவுக்கு லாட்டரி சீட்டுகளை கொண்டு போனதுல, அரசுக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டிருச்சாம் பா... வரி கட்டாம இருக்க, அப்ப கட்சியில முக்கியப் பொறுப்புல இருந்த சிலரை, லாட்டரி அதிபர், 'வெயிட்டா' கவனிச்சிருக்கார்... இதையெல்லாம் இப்ப தோண்டி துருவிட்டு இருக்காங்க...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் கிளம்ப, மற்ற பெரியவர்களும் நடையைக் கட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us