/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மண் அரிப்பால் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் மண் அரிப்பால் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பால் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பால் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பால் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

திம்மசமுத்திரம், காஞ்சிபுரம் நெட்டேரி, கருப்படிதட்டடை, நீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திம்மசமுத்திரம், வெள்ளைகேட், கீழம்பி புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் அம்மன் குளம் சாலை வழியாக சென்று வருகின்றனர்.
அம்மன் குளம் சாலை, திம்மசமுத்திரம் கிராம சாலை இணையும் இடத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்பேது, சேதமடைந்த பகுதியில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த அம்மன் குளம் சாலையை, 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.