/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மழையில் நெல் மூட்டைகள் சேதம் கொள்முதல் நிலையத்தின் அவலம் மழையில் நெல் மூட்டைகள் சேதம் கொள்முதல் நிலையத்தின் அவலம்
மழையில் நெல் மூட்டைகள் சேதம் கொள்முதல் நிலையத்தின் அவலம்
மழையில் நெல் மூட்டைகள் சேதம் கொள்முதல் நிலையத்தின் அவலம்
மழையில் நெல் மூட்டைகள் சேதம் கொள்முதல் நிலையத்தின் அவலம்
PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

துாத்துக்குடி:விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
துாத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய, 20க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. சில தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால், கொள்முதல் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பன்பண்ணை கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி, மழையில் நனைந்து முளைப்புதிறன் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளிடம், நெல் கொள்முதல் செய்யும் வகையில் தோழப்பன்பண்ணை கிராமத்தில், அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் வரை, இங்கு, ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்தனர்.
அவற்றை எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மூட்டைகள் மீது போடப்பட்டிருந்த தார்ப்பாய்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டன.
தொடர்ந்து மழை பெய்வதால், மூட்டைகள் நனைந்து, நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடவசதி போதாததால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. மழையில் சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை, உடன் அங்கிருந்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.