/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம்: 121 பேர் மனுகிராமங்களில் பட்டா மாறுதல் முகாம்: 121 பேர் மனு
கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம்: 121 பேர் மனு
கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம்: 121 பேர் மனு
கிராமங்களில் பட்டா மாறுதல் முகாம்: 121 பேர் மனு
ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில், நடந்த பட்டா மாறுதல் முகாமில், 121 மனுக்கள் பெறப்பட்டன.
தாலுகா அலுவலகங்களுக்கு பட்டா மாறுதல் கோரி பொதுமக்கள் மனு அளிக்க கிராமப்புறங்களிலிருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மக்களின் வசதிக்காக பட்டா மாறுதல் துரிதமாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பட்டா மாறுதல் முகாம் நடந்தது.உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜெயமணி கூறியதாவது:மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பட்டாமாறுதல் முகாமை வாரம்தோறும் திங்கள் கிழமைகளிலும், கூடுதல் பொறுப்பு கிராமத்தில், செவ்வாய் கிழமைகளிலும் நடத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பட்டா மாறுதல் மனுக்களை திங்கள் கிழமைகளில் பெற்று உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்களை மனுகொடுத்த நாளிலிருந்து வரும் 2வது வெள்ளிக்கிழமைகளிலும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய பட்டா மறுதல் இனங்களை மனுகொடுத்த நாளிலிருந்து நான்காவது வெள்ளிக்கிழமைகளிலும் சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் மூல ஆவணங்களை பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.உட்பிரிவுக்கான கட்டணங்களை நேரில் செலுத்தியும் பட்டா மாறுதல் உத்தரவுபெற்றுக்கொள்ளலாம். பட்டா மாறுதல் மனுக்களுடன் பட்ட மாறுதல் கோரும் சொத்துக்கான கிரையப்பத்திர ஜெராக்ஸ் இணைக்கப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலையில் இரண்டு நாட்கள் 34 கிராமங்களுக்கு நடந்த பட்டா மாறுதல் முகாமில், 57 மனுக்களும், மடத்துக்குளம் தாலுகாவில் நடந்த முகாமில், 64 மனுக்களும் என மொத்தம் 121 மனுக்கள் பெறப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றார்.