பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் துணை தாசில்தார்!
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் துணை தாசில்தார்!
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் துணை தாசில்தார்!
ADDED : ஜூன் 14, 2025 07:21 AM

மயிலாடுதுறை: பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கோவில்பத்து தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர், 59. இவர், தன் தாய் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, சீர்காழி தாலுாகா அலுவலகத்தில் உள்ள மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு அளித்துள்ளார். தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
அலெக்சாண்டர் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, பணத்தை அலெக்சாண்டர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த தேவகியிடம் கொடுத்தார். அந்த பணத்தை, அலுவலகத்தில் இருந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் டெல்பி வாங்கினார்.
அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெல்பி மற்றும் தேவகி இருவரையும் கைது செய்தனர்.