போரில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா; ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்
போரில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா; ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்
போரில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா; ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்
ADDED : ஜூன் 14, 2025 08:10 AM

வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இது உலக நாடுகளை கவலையடையச் செய்தது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவியாக, ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்க படைகள் இடைமறித்து அழித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவது குறித்து தங்களுக்கு முன்பே தெரியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மரணத்தில் இருந்தும், அவமானத்தில் இருந்தும் ஈரானை காப்பாற்ற மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஏனெனில் ஒரு ஒப்பந்தம் நிறைவேறுவதைப் பார்க்க நான் விரும்பினேன். நாங்கள் இஸ்ரேலுக்கு நெருங்கிய முதன்மையான கூட்டாளி. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ஒன்றும் தாமதமாகி விடவில்லை. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தற்போதும் பேச்சுவார்த்தை நடத்தலாம், எனக் கூறினார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருவதை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்திருந்தார். இந்த சூழலில், நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.