/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்கள் விடுதிகளில் வசதியின்றி அவதிமாணவர்கள் விடுதிகளில் வசதியின்றி அவதி
மாணவர்கள் விடுதிகளில் வசதியின்றி அவதி
மாணவர்கள் விடுதிகளில் வசதியின்றி அவதி
மாணவர்கள் விடுதிகளில் வசதியின்றி அவதி
ADDED : செப் 11, 2011 11:15 PM
காரைக்குடி : மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால், உரிய நேரத்தில் உணவு கிடைக்காமலும், துப்புரவு ஊழியர்கள் இன்றி சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது.
இங்கு பிற்பட்டோர், ஆதிதிராவிடர், கல்லூரி மாணவர்களுக்கென 75 விடுதிகள் உள்ளன. விடுதிக்கு காப்பாளர், இரண்டு சமையலர், ஒரு துப்புரவு ஊழியர், இரவு காவலர் இருக்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விடுதிகளில் சமையலர் மட்டுமே உள்ளார். பிற பதவிகள் காலியாக உள்ளன. ஒரு சமையலர் மட்டுமே மூன்று வேலையும் சமைக்கவேண்டும். உதவியாளர் இன்றி, மாணவர்களுக்கு உணவு வழங்குவதில்லை. உணவு பொருட்கள் வாங்குவது முதல் துப்புரவு பணி வரை சமையலர் தான் செய்கிறார். விடுதி காப்பாளர்களும் முறையாக விடுதிக்கு வருவதில்லை. இதனால், மாணவர்கள் விடுதி பராமரிப்பின்றி முடங்கி கிடக்கிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால், பெரும்பாலான விடுதிகளில் மாணவர்களே துப்புரவு பணிகளை மேற்கொள்கின்றனர். உபகரணம் இல்லை: மாணவ, மாணவியர்களை விளையாட்டிலும் ஊக்குவிக்கும் நோக்கில் 'பேட்மிட்டன்', 'வாலிபால்', கால்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதில்லை. மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தமுடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து விடுதி காப்பாளர் ஒருவர் கூறியதாவது: அரசு விடுதிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. விடுதி சமையலரே இப்பணியை கூடுதலாக கவனிக்கிறார். நிரந்தரமாக விடுதிகளுக்கு துப்புரவு ஊழியர்கள் நியமித்தால் மட்டுமே, விடுதிகளை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்றார்.