Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

ADDED : ஆக 25, 2011 11:34 PM


Google News

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டையில் வீட்டின் கதவை தட்டி மூதாட்டியிடம் ரொக்கம்,நகை பறிக்கப்பட்டது.

அரளிக்கோட்டை வெள்ளக்கண்ணு மனைவி சிகப்பி,65.இவர் தனது பேத்தி இலக்கியா,8.உடன் தங்கியிருந்தார்.நேற்று இரவு தூங்கும் போது 12 மணிக்கு யாரோ கதவை தட்டியுள்ளனர்.சிகப்பி கதவை திறந்தார்.

வெளியே நின்ற 4 பேர் சிகப்பியிடம் நகை இருந்தால் தருமாறு மிரட்டியுள்ளனர்.இல்லை என்று கூறியதால் அவரை தலையில் தாக்கி விட்டு வீட்டினுள் நுழைந்த திருடர்கள், பீரோவில் இருந்த ரூ.5ஆயிரம்,அரை பவுன் தங்க தோட்டை திருடிச் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us