/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரூ.4.83 லட்Œம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவுரூ.4.83 லட்Œம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
ரூ.4.83 லட்Œம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
ரூ.4.83 லட்Œம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
ரூ.4.83 லட்Œம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 16, 2011 11:56 PM
விருதுநகர் : விருதுநகர் விபத்தில் இறந்த நாங்குநேரியை சேர்ந்த மணிகண்டன்
குடும்பத்தாருக்கு 4.
83 லட்சம் நஷ்டஈடு வழங்க விருதுநகர் கோர்ட்
உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கீழகருவேலங்குளத்தை
சேர்ந்தவர் நைனார் மகன் மணிகண்டன்(21). இவர் ராமசாமிக்கு சொந்தமான லோடு
ஆட்டோவை மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு ஓட்டி சென்றார். 2010 மே 13 ம்
தேதி இரவு 8. 40 மணிக்கு லோடு ஆட்டோ விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள
போலீஸ் பாலம் அருகே சென்றது. அப்போது ராமச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த
லோடு வேன் மோதியதில் மணிகண்டன் இறந்தார். இழப்பீடு கேட்டு இவரது
குடும்பத்தார் விருதுநகர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான
விசாரணையில் இவரது குடும்பத்தாருக்கு, மதுரை ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ்
நிறுவனம் 4 லட்சத்து 83 ஆயிரத்து 240 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என
விருதுநகர் சப் கோர்ட் நீதிபதி ஏ. லியாகத் அலி உத்தரவிட்டார்.