Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்கு எதிர்ப்புஏ.எப்.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்கு எதிர்ப்புஏ.எப்.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்கு எதிர்ப்புஏ.எப்.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்கு எதிர்ப்புஏ.எப்.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 15, 2011 04:13 AM


Google News
புதுச்சேரி:ஏ.எப்.டி., மில் குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.எப்.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஏ.எப்.டி., மில்லில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் திடீரென மில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், அரசு இலவச துணி ஏ.எப்.டி., மில்லில் நெய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரில் பாலியஸ்டர் துணி நெய்யப்பட வில்லை என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஏ.எப்.டி., மில்லுக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கிடைக்காமல் போவதால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மில்லின் உண்மை நிலை அறிந்து எம்.எல்.ஏ.,க்கள் பேச வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us