/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி: 6 பேர் கவலைக்கிடம்சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி: 6 பேர் கவலைக்கிடம்
சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி: 6 பேர் கவலைக்கிடம்
சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி: 6 பேர் கவலைக்கிடம்
சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி: 6 பேர் கவலைக்கிடம்
ADDED : ஆக 05, 2011 10:04 PM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு
ஆலையில் நேற்று பகலில் நடந்த வெடி விபத்தில் ஐந்து பெண் தொழிலாளர்கள் உடல்
கருகி பலியாகினர். ஒரு பெண் மதுரை ஆஸ்பத்திரியில் இறந்தார். 6 பேர் தீ
காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி காளையார்குறிச்சியில் கனகபிரபுக்கு சொந்தமான 'சுப்ரீம் பைரோ
ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள 50 தனி அறைகளில் 200 தொழிலாளர்கள்
வேலை செய்தனர். நேற்று மதியம் 1.45 மணிக்கு தொழிலாளர்கள் அனைவரும் மதிய
உணவிற்காக, பட்டாசு தயாரிப்பு அறைகளை விட்டுவெளியே வந்து, ஆலை
முன்பகுதியில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர். ஆலையின் நுழைவு
வாயில் இடது பகுதியில் வேதிப்பொருட்கள் வைப்பதற்காக அடுத்தடுத்து ஐந்து
அறைகள் உள்ளன.
ஒவ்வொரு அறையிலும் கரித்தூசி, அலுமினியப்பவுடர், பச்சை உப்பு
என தனித்தனியாக வைத்து இருந்தனர். அங்கு தொழிலாளி ஒருவர் பேன்சிரக
பட்டாசுக்கு தேவையான வேதிப் பொருட்களை எடைபோட்டு கொண்டிருந்தார். இதனால்
அறைகளின் முன்பு வேதிப் பொருட்கள் சிதறி இருந்தது. அப்போது வேதிப்பொருட்கள்
வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்று தவறி விழுந்ததில் வெடி விபத்து
ஏற்பட்டது. இதன் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயானது , மற்ற வேதிப்பொருட்கள்
மீது பட, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீயுடன் சிதறியது. விபத்திற்கு
பயந்து ஓடிய பெண் தொழிலாளர்கள் அறையின் ஒரு மூலையில் ஒதுங்கியபோது அவர்களை
தீ சூழ்ந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே கருகி இறந்தனர். வெடி விபத்தில்
50 அடி தூரத்திற்கு தீ பற்றியதால் அறைக்கு முன் இருந்த மற்ற தொழிலாளர்களும்
விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். சிவகாசி தீயணைப்பு படை அலுவலர் சண்முக
நாதன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர் விபத்தில் உடல் கருகி இறந்த
புதுக்கோட்டையை சேர்ந்த முத்தையா மனைவி சண்முகத்தாய்(45) சின்னாத்தேவர்
மனைவி அங்கம்மாள், பீகாரை சேர்ந்த மம்தா(26) காடனேரி முத்து மனைவி
வீரம்மாள்(50) காடனேரி அய்யாவு மனைவி ஆவுடைத்தாய்(53) ஆகியோரின் உடல்களை
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். குல்லூர் சந்தையைச்சேர்ந்த அம்மாபொண்ணு(40)
என்ற பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
காயம் அடைந்த
புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் (45) முனியாண்டி(45) சித்தமநாயக்கன்பட்டி
பாண்டி(53) குல்லூர் சந்தை பத்மாவதி(50) வீரம்மாள்(50) பீகாரை சேர்ந்த
உஷ்மா(20) ஆகியோர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர
சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில்
உள்ளனர்.அமைச்சர் உதயகுமார், கலெக்டர் பாலாஜி, நஜ்மல்கோதா எஸ்.பி.,
முனுசாமி ஆர்.டி.ஓ., ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
கூறினார்.
பட்டாசு ஆலை விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு : போர்மேன்
கைது :சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேர்
மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில்,போர்மேன் கைது
செய்யப்பட்டார்.சிவகாசி காளையார் குறிச்சியில் உள்ள 'சுப்ரீம் பைரோ
ஒர்க்ஸ்' பட்டாசு ஆலையில் நேற்று நடந்த பட்டாசு வெடி விபத்தில்6 பெண்
தொழிலாளர் இறந்தனர். ஆபத்தான நிலையில் மற்ற ஆறு தொழிலாளர்கள் மதுரையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் ஆலை உரிமையாளரான சிவகாசியை
சேர்ந்த கனகபிரபு, செவலூரை சேர்ந்த மேலாளர் பழனிச்சாமி, விருதுநகரை சேர்ந்த
போர்மேன் செந்தில் ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ,போர்மேன்
செந்தில் ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.