தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஜூன் 10, 2025 01:39 PM

சென்னை: 'தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்' என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் விரைவில் தாழ் தள எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்க உள்ளன. இந்தியாவிற்கே லீடராக தமிழகம் திகழ்கிறது. ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில்களை தொடங்க கடன் வழங்கப்பட்டு உள்ளது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கி பெரும் பங்கு வகிக்கிறது.
உலக வங்கியுடன் உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை பெண்கள் பங்களிப்பு இல்லாமல் அடையவே முடியாது. தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்.
வளர்ச்சி அடைந்து வரும் துறையில், பெண் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 9.69% என்ற பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் எஞ்சினாக தமிழகம் உள்ளது. 2030ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய தமிழகம் பயணித்து வருகிறது. வரும் காலங்களில் கடன் உதவி வழங்கி, உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.