உள்ளாட்சி தேர்தலை முன்னிறுத்தி பத்திரிகைகள் அச்சடிப்பு : அரசியல்வாதிகள் யுக்தி
உள்ளாட்சி தேர்தலை முன்னிறுத்தி பத்திரிகைகள் அச்சடிப்பு : அரசியல்வாதிகள் யுக்தி
உள்ளாட்சி தேர்தலை முன்னிறுத்தி பத்திரிகைகள் அச்சடிப்பு : அரசியல்வாதிகள் யுக்தி
திருப்புவனம் : உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து உள்ளூர் அரசியல்வாதிகள், விழா பத்திரிகைகளில் கிராம முக்கியஸ்தர்கள் பெயர்களை அச்சடித்து தற்போதே ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தங்களது பகுதியில் ஏதாவது ஒரு விழாவை நடத்தி, விழா அழைப்பிதழில் கிராம ஊராட்சிக்குட்பட்ட கிராம முக்கியஸ்தர்கள், பெரியவர்கள் பெயர்களை அச்சடித்து வினியோகிக்கின்றனர்.முக்கியஸ்தர்களுக்கு விழாவில் மாலை, சால்வை அணிவித்து கவுரவப்படுத்துவதன் மூலம், ஓட்டுக்களை பெற முயற்சிக்கின்றனர். தேர்தலையொட்டி, வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திப்பதை விட, வீட்டுக்கே அழைத்து விருந்து கொடுத்து ஆதரவு திரட்டும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளனர்.ஆடி முடிந்து ஆவணி பிறந்ததால் விழாக்கள் அதிகரித்துள்ளன. அதே நேரம் உள்ளாட்சி தேர்தலும் நெருங்குவதால், இதுவரை கண்டுகொள்ளப்படாதவர்களை 'வாக்காளர் பட்டியல்' போன்று பெயர்களை அச்சடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.