/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி
33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி
33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி
33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 11, 2011 11:09 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இரவு 9 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. விவசாய நிலங்கள் மற்றும் சாலையோரம் தண்ணீர் தேங்கி, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டிவனத்தில் அதிகளவாக 54மி.மீ., மழை பெய்தது. விழுப்புரத்தில் 45 மி.மீ., வானூரில் 50 மி.மீ., செஞ்சியில் 26 மி.மீ., திருக்கோவிலூரில் 14 மி.மீ., உளுந்தூர்பேட்டையில் 40 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 35 மி.மீ., சங்கராபுரத்தில் ஒரு மி.மீட்டரும் பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 265 மி.மீட்டர் மழையும், சராசரியாக 33 மி.மீட்டர் மழையும் பதிவாகியது. மாவட்டத்தில் பரவ லான மழையின் காரண மாக திண்டிவனம், உளுந் தூர்பேட்டை, திருக்கோவி லூர் பகுதிகளில் அதிகள வில் மானாவாரி பயிர் சாகுபடி செய்திருந்த விவ சாயிகள் மகிழ்ச்சியடைந் தனர்.